நடுரோட்டில் ஹெல்மெட்டால் இளம்பெண்ணை தாக்கும் நபர்.! வெளியான அதிர்ச்சி வீடியோ.!
தன்னுடன் பைக்கில் பெண் ஏற மறுத்ததால் அந்த பெண்ணை ஒரு நபர் ஹெல்மெட்டால் தாக்கிய சம்பவம் ஹரியானா மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.
அண்மைகாலமாக வட மாநிலங்களில் பெண்களுக்கு எதிராக, குறிப்பாக இளம்பெண்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகமாகி கொண்டு இருக்கிறது. அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.
ஹரியானா மாநிலம் குருகிராமில் நாடு ரோட்டில் ஒரு நபர் தனது பைக்கில் வருகிறார். அப்போது அங்கிருந்த ஒரு பெண்ணை வழிமறித்து ஏதோ வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.
வாக்குவாதம் முற்றி அந்த நபர் தான் வைத்திருந்த ஹெல்மெட்டால் அந்த பெண்ணை தாக்குகிறார். உடனே அக்கம் பக்கத்தினர் வந்து சண்டையை தடுத்து நிறுத்துகின்றனர். விசாரணையில் அந்த நபர் மற்றும் பாதிக்கப்பட்ட பெண் ஒரே பகுதியில் வசிப்பவர்கள் முன்பின் தெரிந்தவர்கள் ஆவர்.
தற்போது பாதிக்கப்பட்ட அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இந்த வழக்கு குறித்து காவல்துறையினர் கூறுகையில் தன்னுடன் பைக்கில் எற மறுத்ததால் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த நபர் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கபட்டுள்ளது.
#WATCH | Haryana: CCTV footage of a man named Kamal hitting a woman with his helmet after she refused to ride on his bike. pic.twitter.com/Az3MWRKKWo
— ANI (@ANI) January 6, 2023