ரீல்ஸ் மோகம்…காரில் டீசலை அதிகமாக நிரப்பிய நபர்…கைது செய்த போலீஸ்!
ராஜஸ்தான் : பலர் சமூக வலைத்தளங்களில் பிரபலமடைய சில ஆபத்தான செயல்களில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இது போன்ற செயல்களில் ஈடுபட்டு கடைசியாக காவல்துறையிடம் கைதாகியும் வருகிறார்கள். அப்படி தான் ராஜஸ்தானில் உள்ள பெட்ரோல் பங்கில் ஒருவர் தனது எஸ்யூவியின் காருக்கு டீசல் போடும்போது மோசமான செயல் ஒன்றில் ஈடுபட்ட காரணத்தால் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக வைரலாக பரவிய வீடியோவில் நபர் ஒருவர் தனது காருக்கு டீசல் போடுவதற்காக பெட்ரோல் பங்கிற்கு வந்து டீசல் டேங்க் முழுவதுமாக நிரம்பியும் கூட பாதி டீசலை கிழவே ஒழுகவிட்டுக்கொண்டு இருந்தார். அதைப்போல மற்றோரு பெட்ரோல் பங்கிலும் அந்த நபர் டீசல் முழுவதுமாக இருந்தும் வேண்டும் என்றே ரீல்ஸ் எடுக்க டீசலை வெளியே விட்டுக்கொண்டு இருந்தார்.
रील बनाने के लिए रईसजादे की हरकतों को देखिए…बर्बाद किया डीजल हो सकता था बड़ा हादसा, वायरल वीडियो में @PoliceRajasthan को संज्ञान लेकर सख्त कार्रवाई करनी चाहिए। @RajCMO pic.twitter.com/ll3kNJgVB2
— UP Moradabad (@Up_Moradabad) July 3, 2024
பிறகு காரில் நடுரோட்டில் கெத்தாக செல்வதுபோலவும் ஒரு இடத்தில் நின்று கொண்டு கூல்ரிங்ஸ் குடித்துக்கொண்டும் இருந்தார். இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வரும் நிலையில், கடந்த ஜூலை 2 அன்று, அஜ்மீர் காவல்துறை அதைக் கவனத்தில் எடுத்து, விசாரணை செய்து மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தச் சம்பவம் பேரிடரை ஏற்படுத்தியிருக்கலாம் என்று வீடியோவில் இருந்த பதே சிங் மற்றும் மகாவீர் குஜ்ஜார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பெட்ரோல் நிலைய ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தகவலை தெரிவித்தனர்.