1988ஆம் ஆண்டில் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜம்மு காஷ்மீரை சேர்ந்த நபர் 33 ஆண்டுகளுக்குப் பின்பு தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள கெர்கோட் பனிஹால் பகுதியை சேர்ந்த குலாம் மொஹட் என்பவர் மீது 1988ஆம் ஆண்டு பாலியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் காவலர்கள் அவரை கைது செய்வதற்கு முன்பாகவே அவர் இருந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு தப்பித்து ஓடி உள்ளார் குலாம். எனவே அவரை கைது செய்யமுடியாமல் இருந்துள்ளது. தொடர்ந்து காவல்துறையினர் தனது இருப்பிடத்தையும் அடையாளத்தையும் கண்டறியும் பொழுது தனது அடையாளத்தையும் வசிக்கும் இடத்தையும் மாற்றிக் கொண்டே இருந்துள்ளார் குலாம்.
இந்நிலையில் அவர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இவருடன் மேலும் மூவர் கடந்த பல வருடங்களுக்கு முன்பதாகவே கைது செய்யப்பட்டு ஜாமீனும் பெற்று அவர்கள் வெளியில் வந்துள்ளனர். ஆனால் குலாம் மட்டும் கடந்த 33 ஆண்டுகளாக தப்பித்து இருந்து தற்போது அவர் ஸ்ரீநகரில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…