டெல்லியில் பயங்கரம் குறைத்தற்காக நாயை கொடூரமாக இரும்பு கம்பியால் தாக்கிய கொடூரன் வீடியோ
டெல்லியில் பஸ்சிம் விஹாரில் வளர்ப்பு நாய் மற்றும் அதனை காப்பாற்ற வந்த மூன்றுபேரை இரும்பு கம்பியால் நபர் ஒருவர் தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.இந்த சம்பவத்தின் வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தரம்வீர் தஹியா என்ற நபர் காலையில் பஸ்சிம் விஹார் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது,வளர்ப்பு நாய் ஒன்று குறைத்துள்ளது.இதனால் ஆத்திரமடைந்த தஹியா நாயின் வாலை பிடித்து கொடூரமாக தூக்கி எறிந்துள்ளார்.
#Watch | Barking dog leads to brawl, man hits three residents in #Delhi
Read: https://t.co/zYm1ZTIK4L
Trigger Warning: Visuals may be distressing to some. Viewer discretion advised. pic.twitter.com/iHih8chofw
— Express Delhi-NCR ???? (@ieDelhi) July 4, 2022
அந்த நாயின் உரிமையாளர் ரக்ஷித் தலையிட்டு அதனைப் பாதுகாக்க தஹியாவுடன் சிறு தகராறு ஏற்பட்டது, அந்த நேரத்தில் நாய் கடித்ததாகக் கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த தஹியா திரும்பி வந்து இரும்பு கம்பியால் நாயின் தலையில் தாக்கியுள்ளார்.இதில் நாய் நிலைக்குலைந்து கீழே விழுந்தது.
இதனால் மீண்டும் தகராறு ஏற்பட்டு ரக்ஷித் மற்றும் அவரது பக்கத்து வீட்டுக்காரர் ஹேமந்த் மற்றும் தடுக்க முயன்ற ரேணு என்ற பெண் ஆகியோரை தஹியா தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.இதில் காயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
The police have registered a case against Dharamvir Dahiya, who attacked the residents and struck the pet dog with an iron pipe on Sunday morning.
Read: https://t.co/qQ0qrqTUhj
Trigger Warning: Visuals may be distressing to some. Viewer discretion advised. pic.twitter.com/kxvY2L6XZ6
— Express Delhi-NCR ???? (@ieDelhi) July 4, 2022
இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் (டி.சி.பி., அவுட்டர்) சமீர் சர்மா கூறியதாவது: ரக்ஷித்தின் அறிக்கையின் மீது, இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 308 (குற்றமில்லா கொலை முயற்சி), 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்), 341 (தவறான கட்டுப்பாடு) கீழ் வழக்கு. , மற்றும் 451 (குற்றம் செய்ய வீடு-அத்துமீறல்) மற்றும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 11 (விலங்குகளை கொடூரமாக நடத்துதல்) பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.