Categories: இந்தியா

சுரங்கத்திற்குள்ளே ‘மினி’ மருத்துவமனை.. வேகெமெடுக்கும் மீட்பு பணிகள்.!

Published by
மணிகண்டன்

உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தர்காசி, சில்கியரா சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர், மீட்பு படையினர் , தனியார் மீட்புப்படை அமைப்புகள், சர்வதேச மீட்புப்படையினர் என பல்வேறு அமைப்புகள் இரவு பகலாக கடந்த 17 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர்.

பல்வேறு தடைகளை தாண்டி மேற்கொள்ளப்பட்ட அவர்களின் தொடர் முயற்சிக்கு பலனாக தற்போது மீட்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இயந்திரங்கள் தொடர்ச்சியாக பழுதடைந்த காரணத்தால், இறுதியில் மனிதர்கள் மூலம் துளையிடும் பணியில் நல்ல பலன் கிடைத்த்து. இன்னும் சற்று நேரத்தில் தொழிலாளர்கள் மீட்கப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

தயார் நிலையில் ஆம்புலன்ஸ்.. இறுதி கட்டத்தில் சுரங்க விபத்து மீட்பு பணிகள்.!

அனைத்து குழாய்களும் பதிக்கப்பட்ட நிலையில் தற்போது பாதுகாப்பு வசதிக்காக கூடுதலாக ஒரு குழாய் பதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், தற்போது சுரங்கத்தினுள்ளே ஒரு தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.

சுரங்கத்தில் இருந்து மீட்கப்படும் தொழிலாளர்களுக்கு உடனடியாக ஏதேனும் அவசர சிகிச்சை தேவைப்படுமாயின் அதனை எதிர்கொள்ள 8 படுக்கைகள் , அவசர கால மருந்துகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை சுரங்கத்தினுள்ளே அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மருத்துவர்கள் குழுவும் இருக்கிறார்கள்.

தனியார் மீட்பு குழு அதிகாரி அக்ஷேத் கத்யால் கூறும்போது, “குழாய் எந்தத் தடையும் இல்லாமல் மிகவும் ஜாக்கிரதையாக உள்ளே செலுத்தப்பட்டுள்ளது. குழாய் வழியாக சென்று தொழிலாளர்களை மீட்கும் பணி தொடங்கியுள்ளது. குறைந்தது 3 மீட்புப்படை வீரர்கள் உள்ளே செல்ல உள்ளனர். மீட்பு நடவடிக்கைகள் 4 கட்டங்களாக நடைபெற உள்ளது என்றும் மீட்பு குழு அதிகாரி தெரிவித்தார்.

Recent Posts

அண்ணாமலைக்கு எதிரான கருத்து: ஆதவ் அர்ஜூனாவுக்கு மார்ட்டினின் மகன் சரமாரி குற்றச்சாட்டு.!

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் கடந்த மார்ச் 28ம் தேதி சென்னை திருவான்மியூர்ராமச்சந்திரா…

3 minutes ago

சம்பவம் செய்யும் வீர தீர சூரன்…வசூல் முதல் ஓடிடி அப்டேட் வரை!

சென்னை : விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் பெரிய எதிர்பார்புகளுக்கு மத்தியில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில்…

50 minutes ago

சுங்கச்சாவடி கட்டண உயர்வு இன்று முதல் அமல்.! வாகன ஓட்டிகள் அதிருப்தி…

சென்னை : தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் இன்று, அதாவது (ஏப்ரல் 1) முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. …

52 minutes ago

live : தமிழ்நாடு சட்டப்பேரவை முதல்…சுட்டெரிக்கும் வானிலை அப்டேட் வரை!

சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, இன்று, அதாவது 2025 ஏப்ரல் 1 அன்று, தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும்…

2 hours ago

சுற்றுலா பயணிகளே கவனம்! கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை இன்று முதல் அமல்!

சென்னை : கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை இன்று, அதாவது 2025 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின்…

2 hours ago

மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் விண்வெளி செல்வீர்களா? சுனிதா வில்லியம்ஸ் சொன்ன பதில்!

ஃபுளோரிடா : கடந்த 2024 ஜூலை மாதம், ஒரு வார கால ஆராய்ச்சிப் பணிக்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS)…

3 hours ago