சுரங்கத்திற்குள்ளே ‘மினி’ மருத்துவமனை.. வேகெமெடுக்கும் மீட்பு பணிகள்.!

உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தர்காசி, சில்கியரா சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர், மீட்பு படையினர் , தனியார் மீட்புப்படை அமைப்புகள், சர்வதேச மீட்புப்படையினர் என பல்வேறு அமைப்புகள் இரவு பகலாக கடந்த 17 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர்.
பல்வேறு தடைகளை தாண்டி மேற்கொள்ளப்பட்ட அவர்களின் தொடர் முயற்சிக்கு பலனாக தற்போது மீட்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இயந்திரங்கள் தொடர்ச்சியாக பழுதடைந்த காரணத்தால், இறுதியில் மனிதர்கள் மூலம் துளையிடும் பணியில் நல்ல பலன் கிடைத்த்து. இன்னும் சற்று நேரத்தில் தொழிலாளர்கள் மீட்கப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
தயார் நிலையில் ஆம்புலன்ஸ்.. இறுதி கட்டத்தில் சுரங்க விபத்து மீட்பு பணிகள்.!
அனைத்து குழாய்களும் பதிக்கப்பட்ட நிலையில் தற்போது பாதுகாப்பு வசதிக்காக கூடுதலாக ஒரு குழாய் பதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், தற்போது சுரங்கத்தினுள்ளே ஒரு தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.
சுரங்கத்தில் இருந்து மீட்கப்படும் தொழிலாளர்களுக்கு உடனடியாக ஏதேனும் அவசர சிகிச்சை தேவைப்படுமாயின் அதனை எதிர்கொள்ள 8 படுக்கைகள் , அவசர கால மருந்துகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை சுரங்கத்தினுள்ளே அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மருத்துவர்கள் குழுவும் இருக்கிறார்கள்.
தனியார் மீட்பு குழு அதிகாரி அக்ஷேத் கத்யால் கூறும்போது, “குழாய் எந்தத் தடையும் இல்லாமல் மிகவும் ஜாக்கிரதையாக உள்ளே செலுத்தப்பட்டுள்ளது. குழாய் வழியாக சென்று தொழிலாளர்களை மீட்கும் பணி தொடங்கியுள்ளது. குறைந்தது 3 மீட்புப்படை வீரர்கள் உள்ளே செல்ல உள்ளனர். மீட்பு நடவடிக்கைகள் 4 கட்டங்களாக நடைபெற உள்ளது என்றும் மீட்பு குழு அதிகாரி தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025