விபச்சார தொழில் செய்யும் எஜமானியிடம் ஆட்டையை போட நினைத்து கையும் களவுமாக மாட்டிக்கொண்ட வேலைக்காரி.
குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் எனும் இடத்தில் வசித்து வரக்கூடிய வீட்டு வேலை செய்யும் பெண்மணி தனது எஜமானிக்கு உண்மையாக இருக்க நினைக்காமல் எஜமானியின் ஆடம்பர வாழ்வைப் பார்த்து பொறாமை பட்டுள்ளார். கணவன் இறந்த பின்பு விபசார தொழில் செய்து வந்த அந்த எஜமானிக்கு அந்த தொழில் மூலம் கிடைக்கக்கூடிய வருமானத்தில் கோடிக்கணக்கில் சம்பாதித்து பல வீடுகள் கட்டி அவருடைய மகளுக்கும் அன்மையில் சீர்வரிசை அதிக அளவில் செய்து, ஆடம்பரமாக திருமணம் நடத்தி வைத்துள்ளார். எஜமானியின் ஆடம்பர வாழ்வைப் பார்த்து அதிலிருந்து கொஞ்சத்தை ஆட்டையைப் போட விரும்பிய வீட்டு வேலைக்காரி கடந்த வாரம் தானாக நான்கு பெண்களை செட்டப் செய்து கூட்டி வந்து போலீஸ் போல வேடமிட்டு எஜமானியின் பங்களா கதவை தட்டியுள்ளார்.
முகமூடி அணிந்து முகத்தை முழுவதுமாக மூடி இருந்த வேலைக்காரி மற்றும் அவரது கூட்டாளிகள் இங்கு பாலியல் தொழில் செய்வதாக தகவல் வந்துள்ளது எனவும் வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க வேண்டுமானால் 30 ஆயிரம் ரூபாய் அபராதமாக கொடுக்க வேண்டும் எனவும் கூறி உள்ளனர். ஆனால் நீண்ட நேரமாக முகமூடி அணிந்து வித்தியாசமாக பேசியதால் சந்தேகம் அடைந்த அந்த எஜமானி கூச்சமிட்டு அருகில் இருந்தவர்களை அழைத்துள்ளார். அப்பொழுது அருகிலிருந்தவர்கள் வந்து முகமுடியை விலக்கி பார்த்தபோது அவரது வீட்டு வேலைக்காரியும் அவள் கூட்டி வந்த சில பெண்கள்தான் என்பது தெரியவந்துள்ளது. எனவே அவர்களை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவர்கள் மீது வழக்கு செய்யப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொண்டு விசாரணைகள் நடைபெற்று வருகிறது.
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…
டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான…
சென்னை : அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும்…
சென்னை : நேற்று மத்திய அரசு கல்வி உரிமை சட்டத்தில் (RTE) ஒரு முக்கிய திருத்தத்தை கொண்டு வந்தது. அதன்படி,…
சென்னை : வழக்கமாகவே படங்களில் வரும் காட்சிகளை மட்டும் பிரமாண்டமாக எடுக்காமல் படத்தில் இடம்பெறும் பாடல்களையும் பிரமாண்டமாக எடுப்பவர் தான் பிரம்மாண்டத்திற்கு…
சென்னை : மறைத்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 37-வது ஆண்டு நினைவு நாள் இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து,…