உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..! வானிலை ஆய்வு மையம் தகவல்..!
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய வடக்கு-ஒடிசா மேற்கு வங்கக் கடலோரப் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 3 நாட்களில் கிட்டத்தட்ட மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகர வாய்ப்புள்ளது.
இந்நிலையில், ஒடிசாவில் கனமழை பெய்யும் என்பதால் கடற்கரை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கியோஞ்சர், சுந்தர்கர், தியோகர், அங்குல், பௌத், சம்பல்பூர், சோனேபூர், பர்கர், ஜார்சுகுடா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதையடுத்து தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் அடுத்த 5 நாட்கள் மிதமான மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.