வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!
வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது படிப்படியாக மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, மேற்கு வங்கம், ஜார்கண்ட், பீகார், உத்தரப் பிரதேசம், ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் விதர்பா உள்ளிட்ட மத்தியப் பிரதேசத்தின் பல பகுதிகளில் இன்று முதல் ஆகஸ்ட் 21 வரை மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய கூடும். இதற்கிடையில், தென்மேற்கு பருவமழையால் வடமாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.