உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள கோரக்பூர்-குஷிநகர் நெடுஞ்சாலையில் ஜகதீஷ்பூர் அருகே, நின்று கொண்டிருந்த பேருந்து பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த லாரி மோதி கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த பேருந்தில் 30க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் 6 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், 27 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், காயமடைந்தவர்களை ஐந்து ஆம்புலன்ஸ்களில் ஏற்றி சென்று கோரக்பூர் மாவட்ட மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த தகவல் கிடைத்ததும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். விபத்து குறித்து விசாரிக்கையில், கோரக்பூரில் இருந்து வந்த ஒரு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பத்ருனாவுக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது, ஜகதீஷ்பூரில் உள்ள மல்லப்பூர் அருகே பேருந்தின் ஒரு டயர் பஞ்சராகி உள்ளது.
காற்று மாசுபாடு..மருத்துவமனைகள் தயார்நிலையில் இருக்க வேண்டும்.! சுகாதார அமைச்சகம்
இந்நிலையில், பேருந்தை சாலையோரம் நிறுத்திவிட்டு வேறு பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது, எதிர்பாராத நிலையில் பின்னால் வேகமாக வந்த லாரி ஒன்று பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளாகியது தெரியவந்துள்ளது.
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…