ஆங்கிலேயர்கள் வருகையும் , இந்தியாவை விட்டு சென்றதும் ஒரு பார்வை !

Default Image

வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் படிப்படியாக இந்தியாவில் தங்களது ஆதிக்கத்தினை செலுத்தி இந்தியாவை முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள்  கொண்டு வந்தனர். அதன் பிறகு ஆங்கிலேயர்களின் இருந்து  1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 இந்தியர்களுக்கு சுதந்திரம் கிடைத்தது.

காந்தியடிகள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல போராட்டங்களை அகிம்சை வழியில் நடத்தினார். காந்தியடிகள் இந்தியாவின் சுதந்திற்கு வித்திட்டவர். இவருடன் சேர்ந்து நாட்டின்  பல முக்கிய தலைவர்கள் தங்களது  பங்களிப்பை அளித்தனர்.

Image result for ஆங்கிலேயர்கள் வருகை

ஆங்கிலேயர்களின்  ஆட்சிக்கு எதிராக “ஒத்துழையாமை இயக்கம்”, , “சட்ட மறுப்பு” , “வெள்ளையனே வெளியேறு”  மற்றும் “உப்புசத்தியா கிரகம்” போன்ற பல போராட்டங்களை மக்கள் ஒன்றாக இணைந்து நடத்தினர்.

இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் ஒன்றாக இணைந்து முழுவீச்சில் சுதந்திரத்திற்காக போராடினார்கள். இந்தியா முழுவதும் சுதந்திர எண்ணம் காட்டுத்தீ போல மக்களின் மனதில் பரவ ஆரம்பித்தது. இதன் விளைவாக ஆங்கிலேயர்கள் தங்களது வணிக நிறுவனங்களையும் , தங்களது ஆதிக்கத்தையும் குறைந்து கொண்டனர்.

Image result for ஒத்துழையாமை இயக்கம்

மக்களின் ஒற்றுமை காரணமாக ஆங்கிலேயர்கள் பயப்பட தொடங்கினர். மேலும் அறவழி போராட்டத்தின் நிலை உச்சம் அடைந்ததை விளைவாக ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்க முடிவு செய்தனர்.

Image result for ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு

இந்தியாவில் நடந்த வந்த தொடர் போராட்டங்களால் ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்து முறைப்படி இந்தியாவிற்கு சுதந்திர அறிக்கையை அறிவித்து தங்களது வெளியேற்றத்தினை உறுதி செய்தது.

அந்த சுதந்திர அறிக்கையை மவுண்ட் பேட்டன் வெளியிட்டார். அந்த அறிக்கையில் ஆங்கிலேய ஆட்சியில் இருந்து விடுவிக்கப்பட்டு தனி சுதந்திர நாடாக இருக்கலாம் என இருந்தது. அதன்படி இந்தியாவில் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்