கேரளாவில் கூலி வேலை செய்தவர், அமெரிக்காவில் நீதிபதி.!
கேரளாவில் கூலி வேலை பார்த்தவர், அமெரிக்காவின் நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவியேற்றுள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வழக்கறிஞர் சுரேந்திரன் கே. பட்டேல், அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள, 240வது மாவட்ட நீதிமன்றத்தின், நீதிபதியாக பதவியேற்றுள்ளார். கேரளாவில் தினசரி கூலித் தொழிலாளிகளுக்குப் பிறந்த பட்டேல், தனது இளம் வயதில் வறுமையைப் போக்க பீடி உருட்டும் தொழிலாளியாகவும் பணியாற்றியிருக்கிறார்.
கேரளாவில் ஏழ்மையில் வளர்ந்த சுரேந்திரன், அமெரிக்காவில் நீதிபதியாகும் வரை ஒரு மிகப்பெரிய சாதனைப் பயணத்தை கடந்துள்ளார். 51 வயதான சுரேந்திரன், தனது சட்டப்படிப்பை 1995இல் முடித்து, பட்டம் பெற்றார், மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சி செய்வதற்கு முன்பு, கேரளாவில் பயிற்சி செய்யத் தொடங்கினார்.