வயநாட்டில் அமோக வெற்றி..! இன்று மக்களைவை எம்.பி.யாக பதவியேற்கிறார் பிரியங்கா காந்தி!
வயநாடு மக்களவைத் தொகுதியில் மாபெரும் வெற்றி கண்ட பிரியங்கா காந்தி இன்று எம்.பி.யாக பதவியேற்கிறார்.
டெல்லி : முன்னதாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வயநாடு மற்றும் ரேபேரலி தொகுதியில் போட்டியிட்டு ராகுல் காந்தி இரண்டிலும் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து, வயநாட்டில் தனது பதிவியை ராஜினாமா செய்ததால், அந்த தொகுதிக்கு மட்டும் இடைதேர்தலானது நடைபெற்றது.
அதன்படி, கடந்த டிச.-13ம் தேதி வயநாடு மக்களவைத் தொகுதியில் இடைதேர்தலானது நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக கடந்த டிச.23-ல் அந்த தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது.
அதில், 6.22,238 வாக்குகள் பெற்று 4 லட்சத்திற்கும் மேலான வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி அமோக வெற்றியைப் பெற்றார். இதனால், அவர் வயநாடு மக்களவை தொகுதியின் எம்.பியாகவும் தேர்வானார்.
இதுவரையில் அரசியலில் நேரடியாக களமிறங்காத பிரியங்கா காந்தி, தனது சகோதரர் ராகுல் காந்திக்கும், தாயார் சோனியா காந்திக்கும் பிரச்சாரம் மட்டுமே செய்து வந்தார். ஆனால், முதல் முறையாக நேரடியாக வயநாடு தொகுதியில் எம்.பியாக போட்டியிட்டு அதில் வாரலற்று வெற்றியை பதிவு செய்துள்ளார்.
இதன் காரணமாக, பிரியங்கா காந்தி இன்று வயநாடு தொகுதியின் எம்.பியாக பதவியேற்கவுள்ளார். அவருக்கு சபா நாயகர் பதவி பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். லோக்சபாவில் மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்ப எதிர்க்கட்சிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் பிரியங்கா காந்தியின் வருகை இருக்கும் என காங்கிரஸ் கட்சியினரிடையே கூறி வருகின்றனர்.