சத்தீஸ்கர் : மாநிலம் ராய்பூரில் வீட்டுவசதி வாரிய கணக்காளர் (housing board accountant) ஒருவர் திடீரென அலுவலக கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராய்பூரில் உள்ள வீட்டு வசதி வாரியத்தின் சிசிடிவி வீடியோவில், நரேஷ் சாஹு என்ற கணக்காளர் கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. வைரலாகி வரும் வீடியோவில் வீட்டுவசதி வாரிய கணக்காளர் ஒருவர் வேகமாக யோசித்து கொண்டு வருகிறார்.
பிறகு திடீரென வேதனையுடன் வேகமாக அங்கிருந்த கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வைத்தனர்.
திடீரென வீட்டுவசதி வாரிய கணக்காளர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இதற்கு காரணம் என்ன? அவருடைய தற்கொலைக்கு தூண்டிய விஷயம் என்னவென்ற காரணம் குறித்த தகவலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் நரேஷ் சாஹு என அடையாளம் காணப்பட்டார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…