இந்து பெண் – இஸ்லாமிய இளைஞன்… திருமணத்தை செல்லாது என அறிவித்த ம.பி உயர் நீதிமன்றம்!
கலப்பு திருமணம் : இந்து-முஸ்லிம் திருமணமானது முஸ்லீம் தனிப்பட்ட சட்டத்தின் கீழ், செல்லாது என மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய கலப்பு திருமண சட்டம் 1954 இன் படி, ஒரு இந்து பெண்ணும், இஸ்லாமிய இளைஞரும், தங்கள் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும் என்றும், அதற்கு தங்கள் குடும்பத்தில் இருந்து தங்களை பாதுக்காக்க போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.
இருவருக்குமிடையிலான உறவை பெண்ணின் குடும்பத்தினர் எதிர்த்ததாகவும், எனவே, கலப்பு திருமணம் செய்துகொண்டால் சமூகத்தில் தங்களை புறக்கணித்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் இருவரும் இருந்ததாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குர்பால் சிங் அலுவாலியா இந்திய அரசியலமைப்பின் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்தாலும் கூட, இஸ்லாம் மதத்தின் கீழ் உள்ள சட்டத்தின் கீழ் இதஹு திருமணமாக கருதப்படாது என நீதிபதி குறிப்பிட்டார். மேலும்,இஸ்லாமிய திருமண சட்டத்தின்படி, ஒரு இஸ்லாமிய இளைஞருக்கு உருவ வழிபாடு என்பது இல்லை. நெருப்பை தெய்வமாக வழிபடும் இந்து பெண்ணுடன் திருமணம் செய்வது அவர்கள் வழக்கப்படி செல்லுபடியாகாது. சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அந்தத் திருமணம் இஸ்லாமிய மதத்தின்படி செல்லுபடியாகாது என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்த பெண் தனது முஸ்லீம் நண்பரை திருமணம் செய்து கொள்வதற்கு முன் வீட்டில் இருந்து நகைகளை எடுத்து சென்றதாகவும் குடும்பத்தினர் தரப்பில் இருந்து கூறப்பட்டு இருக்கிறது. இருப்பினும், இருவரும் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும், திருமணத்திற்காக அந்த பெண்ணோ அல்லது அந்த ஆணோ தங்களுடைய மதத்தை மற்ற விரும்பவும் இல்லை என்று அவர்களது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
பெண் தொடர்ந்து இந்து மதத்தைப் பின்பற்றுவார், அதே நேரத்தில் ஆண் அவர்களின் திருமணத்திற்குப் பிறகும் இஸ்லாத்தைப் பின்பற்றுவார் என்று வழக்கறிஞர் வாதாடினார். திருமணத்தை பதிவு செய்ய சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் திருமண அதிகாரி முன் ஆஜராகி, தம்பதியருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் வாதிட்டார். தனிப்பட்ட சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டிருந்தாலும், மதங்களுக்கு இடையேயான திருமணம் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் செல்லுபடியாகும் என்றும் சிறப்பு திருமணச் சட்டம் தனிநபர் சட்டத்தை மீறும் என்றும் அவர் எடுத்து கூறினார்.
இதனால், இருவருமே மதம் மாறுவதற்கும் தயாராக இல்லை என்று குறிப்பிட்டதும் தம்பதியினரின் மனுவை மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், திருமணம் நடக்கவில்லை என்றால், அவர்கள் இன்னும் லிவ்-இன் உறவில் வாழ ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை குறிக்கும் வகையில் உள்ளது.
இந்நிலையில், முஸ்லீம் சட்டத்தின் கீழ், இந்த திருமணத்தின் ஒழுங்கற்ற நிலையைக் கருத்தில் கொண்டு, மனுதாரர்களுக்கு போலீஸ் பாதுகாப்புக்கு உரிமை இல்லை என்று நீதிமன்றம் முடிவு செய்து. இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
மேலும், ஒரு முஸ்லீம் ஆணுக்கும், இந்துப் பெண்ணுக்கும் இடையிலான திருமணத்திலிருந்து பிறக்கும் குழந்தைகளின் பரம்பரை உரிமைகளைக் கை ஆளுவதால் தம்பதியினருக்கு இடையே நிச்சயிக்கப்படும் திருமணம் ஒழுங்கற்ற திருமணம் அல்லது ஃபாசிட் திருமணமாக இருக்கும். இதனால், சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்வதால் ஒருவரது மதத்தின் அடிப்படையில், தனிப்பட்ட சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட அந்த திருமணத்தை சட்டப்பூர்வமாக்க முடியாது. மேலும், இந்த சிறப்பு திருமணச் சட்டத்தின் பிரிவு 4ன் படி இரு தரப்பினரும் தடைசெய்யப்பட்ட உறவில் இல்லை என்றால், திருமணத்தை மட்டுமே செய்ய முடியும்” எனவும் மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் நீதிபதி குர்பால் சிங் அலுவாலியா கூறியுள்ளார்.