அதிவேக கார்.. சிறுமிகளை தூக்கி எறிந்த கோர சம்பவம்! நெஞ்சை உறைய வைக்கும் சிசிடிவி காட்சி!!
உத்தரகாண்ட்: கடந்த ஜூன்-24ம் தேதி அன்று உத்தரகாண்டில் உள்ள, நியூ தெஹ்ரி மாவட்டத்தில் இருக்கும் பௌராடியில் ஒரு பெண்ணும், அவரது 2 மருமகளும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, எதிரில் அதிவேகமாக வந்த அரசு அதிகாரி ஒருவரின் கார் அவர்கள் மீது மோதியது. இதில் அந்த மூவரும் தூக்கி எறியப்பட்டனர்.
இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார், மேலும் அந்த 2 சிறுமிகளும் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து இந்த கார் மோதியதில் மேலும் இருவர் லேசான காயம் அடைந்தனர்.
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர்களான நேகி (36 வயது), சிறுமிகளான அக்ரிமா (10 வயது) மற்றும் அன்விதா (7 வயது)ஆவார்கள். இந்த கோர விபத்து சம்பவம் நியூ தெஹ்ரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தை ஏற்படுத்திய அரசு அதிகாரி குடிபோதையில் இருந்ததால் தான் இந்த விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. இந்த காரை ஒட்டி வந்த தொகுதி மேம்பாட்டு அதிகாரியான தேவி பிரசாத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், இந்த விபத்து தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் பார்ப்போர் மனதை உறைய வைக்கும் அளவிற்கு உள்ளது இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
उत्तराखंड : खंड विकास अधिकारी (BDO) की तेज रफ्तार कार ने वॉक कर रही महिला और 2 बच्चियों को कुचला। तीनों की मौत हुई। आरोपी अफसर देवीप्रसाद को गिरफ्तार किया। नई टिहरी जिला मुख्यालय के बौराड़ी में ये दर्दनाक हादसा हुआ है। pic.twitter.com/exSvnA6zdh
— Sachin Gupta (@SachinGuptaUP) June 25, 2024