இந்திய நாட்டை காக்க உயிர்நீத்தவர்களுக்கு வீர அஞ்சலி செலுத்துகிறேன் – மோடி
லடாக்கில் எல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில் அங்கு ஆய்வுகள் மேற்கொண்ட பிரதமர் மோடி, லடாக்கில் நமது நிலத்தை யாராலும் ஆக்கிரமிக்க முடியாது என உரையாற்றினார்.
இந்தியா- சீனா இடையே எல்லைப் பிரச்சினை உள்ளதால், லடாக் எல்லையில் இரு நாடுகளின் படைகள் குவிக்கப்பட்டது. இதனிடையே இந்தியா- சீனா வீரர்கள் இடையே லடாக் எல்லையில் மோதல் ஏற்பட்டது. இதில், இந்தியா வீரர்கள் 20 வீரமரணம் அடைந்தனர்.
இந்நிலையில் சீனா – இந்தியா ராணுவத்திற்கு இடையே பதற்றம் நீடிக்கும் நிலையில் இன்று பிரதமர் மோடி லடாக்கிற்கு பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்த பின்னர் அங்கு உள்ள ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உறையாற்றினார் அதில் இந்திய நாட்டை காக்க உயிர்நீத்தவர்களுக்கு திரும்பவம் வீர அஞ்சலி செலுத்துகிறேன் என கூறியுள்ளார். மேலும் லடாக்கில் நமது நிலத்தை யாராலும் ஆக்கிரமிக்க முடியாது என்ற கருத்தை முன் வைத்தார். பின்னர் இந்திய வீரர்கள் தைரியம் ,மன தைரியத்தை கண்டு எதிரிகள் பயப்படுகிறார்கள் என்று கூறினார்.
#WATCH Prime Minister Narendra Modi addresses soldiers in Nimoo, Ladakh https://t.co/LCa8oWxL39
— ANI (@ANI) July 3, 2020