மீண்டும் அவதாரம் எடுத்த வெட்டுக்கிளிகள்..குருகிராமைத்தை தாக்க தொடங்கியது.!
சுமார் 3 கி.மீ நீளமுள்ள வெட்டுக்கிளிகள் கூட்டம் ஹரியானா மாநிலத்தின் குருகிராமைத் தாக்கியுள்ளது. இது இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் டெல்லிக்குள் நுழைய வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
டெல்லிக்குள் நுழைய வாய்ப்புள்ளது எனவும் இவற்றை கட்டுப்படுத்த கிராமப்புறங்களில் வாகனம் பொருத்தப்பட்ட பம்ப் செட் மூலம் ரசாயனங்கள் தெளிக்கிறோம் என்று Amit Khatri கூறினார்.
இதனையறிந்த குருகிராம் நிர்வாகம் தாக்குதல் குறித்து அதன் குடியிருப்பாளர்களை எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்கள் ஜன்னல்களை மூடி வைக்குமாறு வலியுறுத்தியுள்ளார்கள். பயிரை உண்ணும் வெட்டுக்கிளிகளை விரட்ட பாத்திரங்களை அடித்து சத்தம் போடுமாறு குருகிராம் நிர்வாகம் கேட்டுக் கொண்டது.
#HappeningNow Outside our balcony in Gurgaon phase 2. #locustattack pic.twitter.com/ipPp358mat
— Kamala Sripada (@kamalasripada) June 27, 2020
இந்த வெட்டுக்கிளிகள் தாக்குதல் உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் சில மாநிலங்களின் பகுதிகளை ஒரு மாதத்திற்கும் மேலாக பேரழிவை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த வெட்டுக்கிளிகள் கூட்டம் பாக்கிஸ்தானின் எல்லையில் உள்ள வடமேற்கு பகுதிகளிலிருந்து நாட்டிற்குள் நுழைந்துள்ளன என்று கூறப்படுகிறது.
The locusts have landed: my parents sent me this video from Gurgaon in India, just 8 km away from where they live. pic.twitter.com/U6vLZvBoqD
— Sesh Nadathur (@SeshNadathur) June 27, 2020