#Breaking: ஒரு நொடியில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்.. இதற்கு வாட்ஸ் அப் மட்டும் போதுமே!

Default Image

வாட்ஸ்-அப்பில் ஓரிரு நொடிகளில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் பெரும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு இடையேயான பயணம் மேற்கொள்ளும்போது கட்டாய தடுப்பூசி சான்றிதழ்களை பல மாநிலங்கள் வலியுறுத்தி வரும் நேரத்தில், கொரோனா தடுப்பூசி சான்றிதழை இப்போது வாட்ஸ்அப் மூலம் சிறிது நொடிகளிலேயே பெறலாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா இன்று கொரோனா தடுப்பூசி பயனாளிகள் தங்கள் தடுப்பூசி சான்றிதழை வாட்ஸ்-அப்மூலம் பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாதாரண மனிதனின் வாழ்க்கையில் புரட்சி! இப்போது கொரோனா தடுப்பூசி சான்றிதழை MyGov கொரோனா ஹெல்ப் டெஸ்க் மூலம் 3 எளிய வழியில் பெறுங்கள். உங்கள் சான்றிதழை சில நொடிகளில் பெறுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் கோவின் தடுப்பூசி போர்ட்டலில் இருந்து தங்களது சான்றிதழை பதிவிறக்கம் செய்து வந்தனர். இது பல சமயங்களில் கோளாறுகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு வாட்ஸ்அப் மூலம் எளிதான முறையில் தடுப்பூசி சான்றிதழை பெற மாற்று வழியை மத்திய அரசு தற்போது ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ்-அப்பில் கொரோனா தடுப்பூசிக்கான சான்றிதழை பெற வழிமுறைகள்:

  • அதன்படி, +91 9013151515 என்ற எண்ணை தங்கள்து செல்போன்களில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
  • பின்னர் அந்த எண்ணிற்கு covid certificate என டைப் செய்து வாட்ஸ்அப்பில் அனுப்பவும், செய்தி அனுப்பப்பட்டவுடன், பயனாளிகள் ஆறு இலக்க ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) பெறுவார்கள்.
  • அதன்பின், உங்களுக்கு வந்த OTP-ஐ அனுப்பும்போது, பயனர்கள் தங்களுக்கான கொரோனா தடுப்பூசி சான்றிதழை ஒரு நிமிடத்திற்குள் பெறுவார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்