சென்னை : பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ஏலத்தில் ஆடு ஒன்று 7.5 லட்சத்திற்கு விற்கப்பட்டது.
பக்ரீத் பண்டிகை வரும் ஜூன் மாதம் 16-ஆம் தேதி கொண்டாடபட இருக்கும் நிலையில், இதனை முன்னிட்டு ஆடுகளின் விற்பனை தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில், மத்தியப் பிரதேசம் போபால் பகுதியில் ஆடு விற்பனை மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.
அங்கு தான் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில், ஒரு ஆடு ஏலத்தில் ரூ.7.5 லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளது. இவ்வளவு விலைக்கு ஆட்டை யார் வாங்கியது? அப்படி என்ன இந்த ஆட்டில் இருக்கிறது நீங்கள் கேட்கலாம். இந்த ஆடு கிட்டத்தட்ட 161 கிலோ எடை கொண்டதாம்.
இந்த ஆடு குறித்து அதனுடைய உரிமையாளர் ஷஹாப் அலி பேசியதாவது ” இந்த ஆட்டிற்கு தற்போது 2 வயது ஆகிறது. இந்த ஆட்டை நான் ராஜஸ்தானில் இருந்து வாங்கி வந்தேன். ஒரு வருடமாக காட்டில் வசித்து வந்ததால், ஆட்டிற்கு சரியான பராமரிப்பு இருக்கவேண்டும் என்பதால், நான் கடந்த ஓராண்டாக ஆட்டை இங்கு கவனித்து வருகிறேன்” என்று கூறியுள்ளார்.
இருப்பினும் இவ்வளவு விலை கொடுத்து இந்த ஆட்டை யார் வாங்கினார் என்று அவருடைய விவரத்தை ஆட்டின் உரிமையாளர் ஷஹாப் அலி கூறவில்லை. இருப்பினும் இவ்வளவு விலைக்கு ஆட்டை விலைகொடுத்து வாங்கி இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…