ஒரு ஆட்டின் விலை 7.5 லட்சம்.! பக்ரீத் பண்டிகை ஏலத்தில் சுவாரஸ்யம்.!

Goat

சென்னை : பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ஏலத்தில் ஆடு ஒன்று 7.5 லட்சத்திற்கு விற்கப்பட்டது.

பக்ரீத் பண்டிகை வரும் ஜூன் மாதம் 16-ஆம் தேதி கொண்டாடபட இருக்கும் நிலையில், இதனை முன்னிட்டு ஆடுகளின் விற்பனை தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில், மத்தியப் பிரதேசம் போபால் பகுதியில் ஆடு விற்பனை மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.

அங்கு தான் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில், ஒரு ஆடு ஏலத்தில் ரூ.7.5 லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளது.  இவ்வளவு விலைக்கு ஆட்டை யார் வாங்கியது? அப்படி என்ன இந்த ஆட்டில் இருக்கிறது நீங்கள் கேட்கலாம். இந்த ஆடு கிட்டத்தட்ட 161 கிலோ எடை கொண்டதாம்.

இந்த ஆடு குறித்து அதனுடைய உரிமையாளர் ஷஹாப் அலி பேசியதாவது ” இந்த ஆட்டிற்கு தற்போது 2 வயது ஆகிறது. இந்த ஆட்டை நான் ராஜஸ்தானில் இருந்து வாங்கி வந்தேன். ஒரு வருடமாக காட்டில் வசித்து வந்ததால், ஆட்டிற்கு சரியான பராமரிப்பு இருக்கவேண்டும் என்பதால், நான் கடந்த ஓராண்டாக ஆட்டை இங்கு கவனித்து வருகிறேன்” என்று கூறியுள்ளார்.

இருப்பினும் இவ்வளவு விலை கொடுத்து இந்த ஆட்டை யார் வாங்கினார் என்று அவருடைய விவரத்தை ஆட்டின் உரிமையாளர் ஷஹாப் அலி கூறவில்லை. இருப்பினும் இவ்வளவு விலைக்கு ஆட்டை விலைகொடுத்து வாங்கி இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்