உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் (BHU) தனது ஆண் நண்பருடன் நடந்து சென்ற, ஐஐடி மாணவியை அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்து வலுக்கட்டாயமாக முத்தமிட்டுள்ளனர்.
அந்த பெண்ணின் ஆடையையும் கழற்றி அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். நேற்று (புதன்கிழமை) பிற்பகல் அளவில் நடந்த இந்த சம்பவத்தையடுத்தும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் நிறுவன இயக்குநர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை சீர் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
கல்லூரியின் பெரும்பாலான பகுதிகளில் பாதுகாப்புப் பணியாளர்கள் இல்லாததால், வளாகத்தில் மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பாக இல்லை என்றும், குடியிருப்பு மற்றும் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவிகளும் பழுதடைந்துள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட அந்த பெண், அவரது பேராசிரியரின் உதவியோடு போலீசில் புகாரளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், லங்கா காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல குழுக்கள் அமைக்கப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர்களை கண்டுபிடித்துக் கைது செய்ய போலீசார் முயற்சி செய்து வருகின்றன.
இதற்கிடையில், பல்கலைக்கழகமும் பாதுகாப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதன்படி, வளாகத்தின் அனைத்து வாயில்களும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை மூடப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இச்சம்பவத்தைத் தொடர்ந்து, உத்தரபிரதேச காங்கிரசும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…