ம.பி-யில் 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்த பெண் குழந்தை…! மீட்பு பணி தீவிரம்.
ம.பி-யில் 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்த பெண் குழந்தை.
மத்திய பிரதேச மாநிலம் செஹோர் மாவட்டம் முகவலி கிராமத்தை சேர்ந்த 2 வயது பெண் குழந்தை, தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது, வீட்டின் அருகில் இருந்த 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 20 அடி ஆழத்தில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் செளஹான் குழந்தையை பாதுகாப்பாக விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.