மணிப்பூரை சேர்ந்த சிறுமியின் கண்ணீருக்கு கிடைத்த பரிசு!
இன்றைய நிலையில், இயற்கையை பொறுத்தவரையில் பாதி அழிந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். தங்களது சுயநலத்திற்காகவும், தங்களின் தனிப்பட்ட தேவைகளுக்காகவும் மக்கள் மரங்களை அழிக்கின்றனர். இதனால், பருவநிலை மாற்றம், இயற்கை பேரழிவு என பல ஆபத்தான நிலைகள் ஏற்படுகிறது.
இந்நிலையில் மணிப்பூரை சேர்ந்த 9 வயது சிறுமியான எலங்பம் வாலண்டினா தேவி, தற்போது இவர் 5-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் 1-ம் வகுப்பு பயிலும் போது, ஆற்றங்கரையில் 2 குல்முகர் மரங்களை நட்டு, அதனை பராமரித்து வந்துள்ளார்.
இதனையடுத்து, தேவி நட்ட இரண்டு மரங்களுக்கு சாலை பணிகளுக்காக வெட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த தேவி கதறி அழுதுள்ளார். இந்நிலையில், மணிப்பூர் முதல்வர் பைரன் சிங், இவர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தேவியை பசுமை மணிப்பூர் திட்ட தூதராக நியமித்து பாராட்டியுள்ளார்.