நாங்க போலீஸ் பேசுறோம்..82 வயது மூதாட்டியிடம் ரூ.20 கோடியை சுருட்டிய கும்பல்…3 பேர் அதிரடி கைது!
மும்பையில் மூதாட்டி ஒருவருக்கு கால் செய்து மர்ம கும்பல் ஒன்று போலீஸ் போல பேசி 20 கோடியை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து வருகிறார்கள். உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் கடந்த ஆண்டு கொல்கத்தாவில் மட்டும் 930-க்கும் மேற்பட்ட இத்தகைய புகாரில் சிக்கியிருந்தார்கள். இந்த மோசடிகளில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் முதியவர்களே என்பதும் தெரிய வந்தது.
இது போன்ற மோசடியில் வயதானவர்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என காவல்துறை வேண்டுகோள் விடுத்தது வருகிறது. இந்த சூழலில் மும்பையை சேர்ந்த 86 வயது முதிய பெண் டிஜிட்டல் மோசடியில் சிக்கி தனது 20 கோடி ரூபாய் பணத்தை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முதலில் அந்த பெண்ணுக்கு மோசடி செய்த நபர்கள் கால் செய்து நாங்கள் மும்பை போலீஸ் பேசுகிறோம் என்பது போல பேசி ஏமாற்றியிருக்கிறார்கள். உங்களுடைய வங்கிக்கணக்கு பெரிய மோசடி வழக்கில் சம்பந்தம் பட்டிருக்கிறது…நாங்கள் உங்களை கைது செய்யப்போகிறோம் என்பது போல பேசி மிரட்டியிருக்கிறார்கள். உங்களின் பாஸ்போர்ட் மற்றும் வங்கி கணக்கு சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் (Money Laundering) தொடர்புடையதாக இருக்கும் ஆதாரம் எங்களிடம் இருக்கிறது என உண்மையான போலீஸ் எப்படி பேசுவார்களோ அதைபோலவே பேசினார்கள்.
இதனால் அந்த மூதாட்டியும் நம்பி இப்போது என்ன செய்யவேண்டும் என்பது போல கூறியுள்ளார். பிறகு அந்த மர்ம மோசடி செய்தவர்கள் இது ரகசியமான விசாரணை என்பதால் குடும்பத்தில் கூட யாரிடமும் சொல்லக்கூடாது என்பது போலவும் கூறி மிரட்டியுள்ளனர். அதன்பிறகு உங்களுடைய வங்கிக்கணக்கில் இருக்கும் பணம் பத்திரமாக இருக்கவேண்டும் என்றால் நாங்கள் சொல்லும் வங்கிக்கணக்கில் உடனடியாக மாற்றுங்கள் அந்த பணம் திரும்பி வந்துவிடும் என மோசடி கும்பல் கூறியுள்ளது.
அதன்பிறகு அவர்களுடைய பேச்சை கேட்டு மூதாட்டியும் ரூ.20 கோடிகளுக்கு மேல் வெவ்வேறு வங்கிகணக்குகளுக்கு கடந்த 2 மாதங்களாக பணத்தை அனுப்பி வைத்துள்ளார். ஒரு கட்டத்தில் பணம் திரும்ப வரும் என காத்திருந்த அந்த மூதாட்டிக்கு கடைசியில் ஏமாற்றம் தான் கிடைத்தது. ஏனென்றால், அவர் அனுப்பிவிட்டு பணத்தில் ஒரு ரூபாய் கூட திரும்ப வரவில்லை..அப்போது தான் நம்மளை ஏமாற்றிவிட்டார்கள் என தெரிந்து அந்த மூதாட்டி உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்து நடந்த சம்பவங்களை கூறியுள்ளார்.
உடனடியாக இது குறித்து காவல்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வந்தது. முதற்கட்டமாக ஷயான் ஜமீல் சேக்(20), ரசிக் அசன் பட்(20) மற்றும் ஹர்திக் சேகர் ஆகியோரை கைது செய்தனர். பணம் மாற்றப்பட்ட வங்கிக் கணக்குகளை அடையாளம் கண்டு, அந்தப் பெண்ணுக்குச் சொந்தமான ரூ.77 லட்சத்தை மட்டுமே சைபர் போலீசார் மீட்டு கொடுத்துள்ளனர். இச்சம்பவத்தில் வெளிநாட்டு கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என்பதால் இன்னுமே தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.