ஒடிசாவில் மீண்டும் ரயில் விபத்து.! சரக்கு ரயில் தடம்புரண்டது.!
ஒடிசா மாநிலம் பர்கார் பகுதியில் சுண்ணாம்பு கற்கள் ஏற்றிவந்த சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
ஒடிசா ரயில் விபத்தின் தாக்கமே இன்னும் மக்கள் மத்தியில் அகலாமல் இருந்து கொண்டிருக்கும் வேளையில் தற்போது ஒடிசாவில் புதிய ரயில் விபத்து செய்தி சற்று அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் பர்கார் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் சுண்ணாம்புக்கல் ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில் ஒன்று காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டுள்ளது. நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பெரிய காயமோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.