லாரி மோதி தீ விபத்து: கொளுந்துவிட்டு எறிந்த மேம்பாலம்…வானத்தில் கிளம்பிய கரும்புகை காட்சி.!
பஞ்சாப் மாநிலம், லூதியானாவின் கன்னா பகுதி அருகே எரிபொருள் ஏற்றி சென்ற லாரி மேம்பாலத்தில் தடுப்பில் மோதி கவிழ்ந்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கொளுந்து விட்டு எரியும் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடினர்.
இந்த தீ விபத்தில் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். தீ விபத்தை தொடர்ந்து அப்பகுதியில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் திட்டம் இல்லை – பெட்ரோலியத் துறை அமைச்சர்!
இந்த விபத்து தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. வீடியோவில், தீ மேம்பாலம் முழுவதும் எறிவது போலும், வானத்தை நோக்கி கரும்புகை கிளம்பும் காட்சிகள் பதற வைக்கிறது.
A massive #fire broke out at a flyover near Khanna area, in Ludhiana after an oil tanker hit a divider and overturned, which led to massive clouds of #smoke in the area.
However, fire was doused and there was no loss of life.#Ludhiana #Khanna #FireAccident #FireSafety pic.twitter.com/bKdFqxvWmT
— Surya Reddy (@jsuryareddy) January 3, 2024
முதற்கட்ட தகவலாக மேம்பாலத்தில் உள்ள டிவைடரில் மோதி எரிபொருள் ஏற்றி சென்ற டேங்கர் தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. மேலும், விபத்தின் போது, அருகில் வேற எந்த வாகனங்களும் வராததால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.