டெல்லியில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து.!
தெற்கு டெல்லியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து.
தெற்கு டெல்லியின் கான்பூர் நகரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தீ விபத்து செய்தியை அறிந்த தீ அணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கப்பட்டதாகவும், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
தீயணைப்புத் துறை இயக்குனர் கூறுகையில், இரவு 9.51 மணியளவில் ஒரு அழைப்பு வந்தது, செய்தியை அறிந்த தீ அணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீ ஏற்பட்ட பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தையும் சிரமத்துடன் அகற்றப்பட்டு தீ அணைத்தனர் என டெல்லி தீயணைப்பு சேவை இயக்குனர் அதுல் கார்க் கூறினார்.