நின்றுகொண்டிருந்த ஹைதராபாத் விரைவு ரயிலில் தீ விபத்து!
தெலங்கானா : செகந்திராபாத் ரயில் நிலைய பாலத்தில் தனியாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹைதராபாத் விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தற்பொழுது, தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோவில், ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ரயில் பாலத்தில் இருந்து தெரியும் இந்த சம்பவம், அதிகப்படியான புகை மூட்டத்தால் சூழ்ந்துள்ளன. இந்த ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
இருந்தாலும், தீ விபத்துக்கான காரணம் மற்றும் காயங்கள் குறித்த விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இதனிடையே, தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.
Two coaches of a train parked at Alugadda Bavi tracks near Secunderabad railway station caught fire on Thursday
The spare coaches were parked on the tracks when smoke started coming out from the bogies.
On noticing it the fire personnel of the Secunderabad fire station and… pic.twitter.com/dnZYVk65dM
— Sudhakar Udumula (@sudhakarudumula) June 20, 2024