Fire Accident in Delhi Income Tax Office [Image source : PTI]
சென்னை : டெல்லியில் உள்ள வருமானவரித் துறை அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள ஐபி எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள வருமானவரித் துறை அலுவலகத்தில் சி.ஆர் கட்டிடத்தில் இன்று பிற்பகல் 3 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது . உடனடியாக தீயணைப்பு துறைக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
முதலில் சம்பவ இடத்திற்கு சுமார் 10 தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதன் பிறகு 4 வது மாடியில் பற்றிய தீ ஏசி வழியாக மற்ற இடங்களில் பரவும் நிலை அறிந்ததும் மேலும் 11 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, மொத்தம் 21 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதற்கிடையில், அலுவலகத்தில் உள்ளே இருந்த ஊழியர்களை ஜன்னல் வழியாக பத்திரமாக தீயணைப்பு வீரர்கள் வெளியேற்றினர். தற்போது தீ முழுதும் அணைக்கப்பட்டு குளிர்விக்கும் முயற்சி நடைபெற்று வருவதாககவும், இந்த தீ விபத்து எவ்வாறு நடந்தது என ஆய்வு செய்தும் வருகின்றனர். இந்த விபத்தில் ஆவணங்கள் மட்டுமே சேதம் அடைந்ததாகவும், யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எதிராக புதிய அதிரடியான வரி உத்தரவை…
பெங்களூர் : ஆர்சிபி அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வென்றது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி,…
சென்னை : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா நேற்றைய தினம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இது…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றதில் இருந்து டோனால்ட் டிரம்ப், அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில்,…
சென்னை : கடந்த சில நாட்களாக கோடைவெயில் வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று திடீரென சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து…
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…