பட்டாசு ஆலையில் தீ விபத்து..! ஒருவர் உயிரிழப்பு..உரிமையாளர் தலை மறைவு.!
உத்தரபிரதேசம்: சஹரன்பூரின் கைலாஷ்பூர் கிராமத்தில் உள்ள ஜெய் பவானி பட்டாசு ஆலையின் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் அங்கு பணிபுரியும் 40 வயதுடைய பிரேம் பிரகாஷ் என்ற நபர் உயிரிழந்துள்ளார். விபத்து குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
பின் கிராம மக்கள் உதவியுடன் தீயை அணைத்தனர். இந்த குடோனில் சுமார் 10 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்ததாகவும், விபத்து ஏற்படும்போது இறந்த ஒருவரைத் தவிர மற்றவர்கள் வெளியே ஓடி தப்பியாதவும் கூறப்படுகிறது. மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்
இதற்கிடையில், பட்டாசு ஆலை நடத்துவதற்கு தொழிற்சாலை உரிமையாளரிடம் உரிமம் இல்லாததால் உரிமையாளர் தலைமறைவாக உள்ளதாகவும், தொழிற்சாலை உரிமையாளரைத் தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளது எனவும் போலீசார் தெரிவித்தனர். மேலும், இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.