திறந்த வெளியில் பிளாஸ்டிக், குப்பைகளை எரித்தால் ரூ.5,000 அபராதம்..!
டேராடூனில் திறந்த வெளியில் பிளாஸ்டிக் அல்லது குப்பைகளை எரித்தால் ரூ.5,000 அபராதம் விதிக்க மாவட்ட நீதிபதி ஆர்.ராஜேஷ் குமார் உத்தரவு.
காற்றின் தரத்தை மேம்படுத்தும் முயற்சியில், டேராடூன் நிர்வாகம் திறந்த வெளியில் பிளாஸ்டிக் அல்லது குப்பைகளை எரித்தால் ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட நீதிபதி ஆர்.ராஜேஷ் குமார் தெரிவித்தார். திறந்த வெளியில் குப்பைகளை எரிப்பவர்கள் மீது அபராதம் போடுமாறு மாநகராட்சி மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
டேராடூன் மற்றும் ரிஷிகேஷ் நகரில் தேசிய சுத்தமான காற்று திட்டத்தின் கீழ் காற்றின் தரத்தை மேம்படுத்தும் செயல் திட்டம் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் திறந்த வெளியில் பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை எரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன் என நீதிபதி ஆர்.ராஜேஷ் குமார் தெரிவித்தார்.