ஹைதராபாத்தில் உள்ள மலக்பேட் பகுதியை சார்ந்தவர் சந்தீப்(24) இவர் சாப்ட்வேர் என்ஜினீயராக ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.இவருக்கு இவரது உறவுக்கார பெண்க்கும் கடந்த சில நாள்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்து உள்ளது.
இவர்களின் திருமணம் நேற்று காலை 11 மணிக்கு நடைபெற இருந்தது.இவர்களின் திருமணம் ஹைதராபாத்தில் உள்ள ஒரு திருமணம் மண்டபத்தில் ஏற்பட்டு செய்யப்பட்டு இருந்தது.
நேற்று முன்தினம் சந்தீப் தனது உறவினர்களுடன் சந்தோசமாக பேசிக்கொண்டு இருந்த சந்தீப் அதிகாலை 3 மணி அளவில் தனது அறைக்கு சென்று தூங்க சென்று உள்ளார்.பின்னர் காலை 7 மணிக்கு சந்தீப் உறவினர்கள் சந்தீப் அறையின் கதவை தட்டி உள்ளனர்.
நீண்ட நேரமாக கதவை தட்டியும் சந்தீப் கதவை திறக்கவில்லை அதிக நேரம் தூங்காமல் இருந்ததால் சந்தீப் தூங்குகிறார் போல என நினைத்து சந்தீப் உறவினர்கள் சென்று விட்டனர் . பின்னர் சிறிது நேரம் கழிந்து வந்து மீண்டும் அறையின் கதவை தட்டி உள்ளனர்.
சந்தீப் கதவை திறக்கவும் இல்லை , எந்தவித சத்தமும் கேட்கவில்லை இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.அங்கு சந்தீப் தூக்கு மாட்டி கொண்டு இறந்த நிலையில் தொங்கி உள்ளார்.
இதை தொடர்ந்து போலீசாருக்கு உறவினர்கள் தகவல் கொடுத்தனர்.அங்கு வந்த போலீசார் சந்தீப் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.எதற்காக சந்தீப் தூக்கு மாட்டி கொண்டார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சந்தீப் தாய் சிறு வயத்திலே இறந்து விட்டார்.இவரது தந்தை ஒரு தொழிலதிபர் இதனால் சந்தீப் தனது தாத்தா வீட்டில் வாழ்ந்து வந்து உள்ளார்.சந்தீப் தனது தாத்தா மீது மிகுந்த பாசம் வைத்து இருந்ததாகவும் கூறப்படுகிறது. சந்தீப் தாத்தா சில மாதங்களுக்கு முன் இறந்து உள்ளார்.தாத்தா இறந்த பிறகு சந்தீப் சோகத்தில் இருந்ததாக கூறப்படுகிறது .தாத்தாவின் பிரிவை தாங்கமுடியாமல் சந்தீப் இறந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…