கங்கானாவை அறைந்த பெண் காவலருக்கு பெங்களூருக்கு பணிமாற்றமா.? CISF புது விளக்கம்.!

பாஜக எம்.பியும், நடிகையுமான கங்கனா ரனாவத்தை தாக்கிய விவகாரத்தில், இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த மத்திய தொழிற் பாதுகாப்பு படை (CISF) பெண் காவலர் குல்விந்தர் கவுர், மீண்டும் பணியில் இணைக்கப்பட்டு, பெங்களூருவுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று ஒரு தகவல் வெளியாகியது.
கடந்த ஜூன் 7ஆம் தேதி, சண்டிகர் விமான நிலையத்தில் பாதுகாப்புச் சோதனையின் போது, கங்கனா ரனாவத் மற்றும் சிஐஎஸ்எஃப் காவலர் குல்விந்தர் கவுர் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முத்தியதும், குல்விந்தர் கவுர் கங்கனா ரணாவத்தை அறைந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, இந்த சம்பவம் தொடர்பாக கங்கனவும் வீடியோ வெளியிட்டு இருந்தார்.
தற்பொழுது, பணியிடமாற்றம் குறித்து செய்தி பொய்யானது என்று CISF தெளிவுபடுத்தியுள்ளது. குல்விந்தர் கவுர் மீண்டும் பணியில் சேர்க்கப்படவில்லை, அவர் இன்னும் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும், அவருக்கு எதிராக விசாரணை இன்னும் நடந்து வருவதாகவும் CISF-ஐ கூறியதை மேற்கோள் காட்டி ANI செய்தி வெளியிட்டுள்ளது.
CISF constable Kulwinder Kaur, who allegedly slapped BJP MP Kangana Ranaut, is still suspended and a departmental inquiry against her is still on: CISF
— ANI (@ANI) July 3, 2024
குல்விந்தர் கவுர் விளக்கம்
கங்கனா ரணாவத்தை அறைந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தின் போது, பஞ்சாபி பெண்களைப் பற்றி கங்கனா ரணாவத் இழிவான கருத்துக்களால் பேசியதால், தான் அறைந்ததாக விளக்கம் கொடுத்திருந்தார்.
யார் இந்த குல்விந்தர் கவுர்
கான்ஸ்டபிள் குல்விந்தர் கவுர் சுல்தான்பூர் லோதி நகரைச் சேர்ந்தவர். பஞ்சாப் மற்றும் சண்டிகர் விமான நிலையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணி புரிந்து வருகிறார். மேலும் அவர் சக CISF அதிகாரியை திருமணம் செய்து கொண்டார், அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025