40 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி அமைச்சரவையில் இரண்டாவது பெண் அமைச்சராக சந்திர பிரியங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து,மே 7 ஆம் தேதியன்று ரங்கசாமி அவர்கள் முதலமைச்சராக பதவியேற்றார்.
பின்னர்,புதுச்சேரி அமைச்சர்கள் தேர்வு செய்வதில் என்.ஆர்.காங்கிரசிற்கும், பாஜகவிற்கும் இடையே இழுபறி நீடித்தது.இதனையடுத்து,பாஜகவுக்கு சபாநாயகர் மற்றும் இரண்டு அமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க முதல்வர் ரங்கசாமி ஒப்புக்கொண்டார்.இதனைத் தொடர்ந்து,அமைச்சரவைக்கான பெயர் பட்டியலை துணை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் அவர்களிடம் கொடுத்தார்.
இந்நிலையில்,இன்று புதுச்சேரி துணை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் அவர்கள் முன்னிலையில் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பாக லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார்,சந்திர பிரியங்கா உட்பட மொத்தம் 5 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.
முன்னதாக 1980 ஆம் ஆண்டில் ரேணுகா அப்பாதுரை காங்கிரஸ்-திமுக கூட்டணியில் கல்வி அமைச்சராக பணிபுரிந்தார்.இந்நிலையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரியில் சந்திர பிரியங்கா என்பவர் அமைச்சராக பதவி ஏற்றுள்ளார்.இவர் காரைக்கால் நெடுங்காடு தொகுதியில் வெற்றி பெற்றவர். மேலும், இவர் முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகளாவார்.
அமைச்சர் பதவியேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சந்திர பிரியங்கா, 40 ஆண்டுகளுக்கு பிறகு பெண்ணுக்கு முக்கியத்துவம் அளித்து பதவி வழங்கியதற்காக முதலமைச்சருக்கு நன்றியை முதலில் தெரிவித்தார். பின்னர், அமைச்சராக பதவியேற்றத்தில் மகிழ்ச்சி என்றும், தனக்கு எத்துறை அளித்தாலும் அதில் சிறப்பாக பணியாற்றுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…