Mumbai:மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 25 ஆண்டுகள் சிறை
மும்பை:தனது 13 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிறப்பு நீதிபதி பார்தி காலே இது பற்றி கூறுகையில் குற்றம் சாட்டப்பட்டவர் தனது சொந்த மகளுக்கு அளவிட முடியாத வலியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியதால், அவர் மன்னிப்புக்கு தகுதியற்றவர்.
“ஒரு தந்தை பாதுகாப்பு, நம்பிக்கை மற்றும் அன்பின் அடித்தளத்தை அமைக்கிறார். ஒரு தகப்பன் தன் மகளின் உயிரைக் காப்பாற்றி, அவள் காயமடையாமல் பாதுகாக்கிறான். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையே அவளுக்கு அளவிட முடியாத வேதனையை ஏற்படுத்தியுள்ளார் என்று கூறினார்.
இந்த கொடூர தந்தைக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 25 ஆண்டுகள் சிறை தண்டனையும்,பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.15,000 இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.