வளர்ப்புனா இதுதான்.. நிலச்சரிவில் சிக்கிய உரிமையாளரை தேடும் நாய்! வைரலாகும் வீடியோ…

dog searches for owner

கர்நாடகா : உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள அங்கோலா தாலுக்காவில் உள்ள ஷிரூர் என்ற கிராமத்திற்கு அருகே தேசிய நெடுஞ்சாலை 66 இல் ஒரு மலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதன் காரணமாக நான்கு வழிச்சாலையில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு முதல் கனமழை பெய்ததால், தேசிய நெடுஞ்சாலை 776-E மற்றும் தேசிய நெடுஞ்சாலை 66 உட்பட பல சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன. இதன் விளைவாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அதே போல், ஹொன்னாவர் மற்றும் பெங்களூருவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 69 இல் நிலச்சரிவு காரணமாக பல மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது, இருப்பினும் சாலை சுத்தம் செய்யப்பட்டு தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

ஒரு தகவல்களின்படி, NH66 தேசிய நெடுஞ்சாலை அருகே இருக்கும் கங்காவலி ஆற்றின் கரையில் உள்ள ஒரு தேநீர் கடையில் நின்று கொண்டிருந்த 5 பேர் நிலச்சரிவில் சிக்கிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் இந்த சம்பவத்தை மாவட்ட நிர்வாகம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

இந்த நிலச்சரிவில் சிக்கி, காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன, ஆனால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மீட்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது இணையத்தில் வைரலாகும் ஒரு வீடியோவில், நிலச்சரிவு ஏற்பட்ட மண் குவில்கள் மீது, நாய் தனது உரிமையாளரை தேடும் காட்சிகள் மனதை உருக வைக்கிறது. இதோ அந்த காட்சி…

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்