கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த 6 அடி தூர இடைவெளி போதாது-ஆய்வில் தகவல்..!

Default Image

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த 6 அடி தூர இடைவெளி போதாது என்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் தகவல் வெளிவந்துள்ளது.

கொரோனா வைரஸ் உட்புறங்களில் உள்ள திரவ செல்களை காற்றின் மூலம் பரவ செய்வதற்கு 6 அடி தூர இடைவெளி போதுமானது இல்லை என்று ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்படி, வெளியேற்றப்பட்ட மனித மூச்சு காற்றின் திரவ துளிகளின் வெளிப்பாட்டைத் தடுக்க உடல் தூரம் மட்டும் போதாது என்றும், முகமூடி மற்றும் போதுமான காற்றோட்டம் போன்ற பிற கட்டுப்பாட்டு விதிமுறைகளும் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் இதில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் மூன்று முக்கிய காரணிகளை ஆய்வு செய்துள்ளனர். ஒரு இடத்தின் வழியாக வெளியேறும் காற்றின் அளவு மற்றும் வீதம், வெவ்வேறு வகையிலான காற்றுகளுடன் உட்புற காற்றின் செயல்பாடு மற்றும் பேசும் போது வெளிப்படும் திரவத்துளிகள் என இந்த மூன்று முறைகளின் அடிப்படையில் ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

மனித சுவாசத்தின் திரவ துளிகள் ஒன்று முதல் 10 மைக்ரோமீட்டர் அளவில் இருக்கும். மேலும், இந்த அளவில் உள்ள திரவ துளிகள் கொரோனாவை ஏற்படுத்தும் வைரஸைக் கொண்டு செல்ல முடியும்.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகத்தின் முதல் எழுத்தாளரும் முனைவர் பட்ட மாணவருமான ஜெனரல் பிய் கூறுகையில், கட்டிடங்களில் பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து வெளியிடப்பட்ட வைரஸ் நிறைந்த துகள்கள் காற்றின் வழியே எவ்வாறு கடக்கிறது என்ற ஆய்வை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்