டெல்லி, மும்பை எக்ஸ்பிரஸ் சாலை திட்டத்தின் கீழ் முடிக்கப்பட்ட டெல்லி – தௌசா – லால்சோட் சாலையை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர்.
விரைவுச் சாலையின் முதல் கட்டப்பகுதி:
டெல்லி-மும்பை விரைவுச் சாலையின் முதல் கட்டப் பகுதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாட்டுக்கு அர்பணிக்கிறார். அதன்படி, டெல்லி, மும்பை எக்ஸ்பிரஸ் சாலை திட்டத்தின் கீழ் முடிக்கப்பட்ட 246-கிமீ டெல்லி-தௌசா-லால்சோட் சாலை திறக்கப்படுகிறது. இதன் மூலம் டெல்லியிலிருந்து ஜெய்ப்பூருக்கு பயண செய்ய 5 லிருந்து சுமார் 3.5 மணி நேரமாக குறைக்கப்படும். இதனால் பொருளாதார வளர்ச்சியும் மேம்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மிக நீளமான விரைவுச் சாலை:
டெல்லி – மும்பை எக்ஸ்பிரஸ் சாலை திட்டத்தின் கீழ் 1,386 கிமீ நீளமுள்ள விரைவுச்சாலை இந்தியாவின் மிக நீளமான விரைவுச் சாலையாக இருக்கும். இது டெல்லி மற்றும் மும்பை இடையேயான பயண தூரத்தை 1,424 கிமீ முதல் 1,242 கிமீ வரை அதாவது 12% குறைக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும், எக்ஸ்பிரஸ் சாலை திட்டம் முழுமையாக முடிந்தவுடன் டெல்லி-மும்பை பயண நேரத்தை 24 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாகக் குறைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு மாநிலங்கள் இணைக்கும் எக்ஸ்பிரஸ் சாலை திட்டம்:
டெல்லி – மும்பை எக்ஸ்பிரஸ் சாலை திட்டம் டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய 6 மாநிலங்களை கடந்து கோட்டா, இந்தூர், ஜெய்ப்பூர், போபால், வதோதரா மற்றும் சூரத் போன்ற முக்கிய நகரங்களை இணைக்கிறது. இந்த நிலையில், டெல்லி – மும்பை இடையிலான விரைவுச் சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக 246 கிமீ தொலைவிற்கு டெல்லி – தௌசா – லால்சோட் பகுதி ரூ.12,150 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள சாலை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…