தெலுங்கானாவில் உள்ள பெனுபலி மண்டலம் வி .எம் பஞ்சாயத்தை சார்ந்த சத்திய நாராயணா வியாபாரி இவரின் செல்போனுக்கு கடந்த 31-ம் தேதி ஒரு மெசேஜ் வந்துள்ளது. அந்த மெசேஜ் லிங்க் கிளிக் செய்து சில நிமிடங்களில் சத்தியநாராயணா வங்கி கணக்கில் இருந்து 96,000 எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்தது.
பின்னர் உடனடியாக சத்யநாராயணா வங்கி நிர்வாகியிடம் இது தொடர்பாக போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மேலும் 23,000 எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்துள்ளது. ஆக மொத்தம் ஒரு லட்சத்து 23 ஆயிரம் சத்யநாராயணா வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டது.
இதுகுறித்து காவல் நிலையத்தில் சத்யநாராயணன் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சத்யநாராயணா வங்கி கணக்கில் இருந்து எந்த கணக்கு பணம் மாற்றப்பட்டது என விசாரணை நடத்தி வருகின்றனர்.