இணையத்தில் விபிஎன் மூலம் தவறான தகவல்களை பரப்பியவர்கள் மீது சைபர் கிரைம் வழக்கு பதிவு.!

Default Image
  • ஜம்மு-காஷ்மீரில் அரசு உத்தரவை மீறி விபிஎன் மூலம் இணையத்தில் தவறான தகவல்களை பதிவிட்ட நபர்கள் மீது காஷ்மீர் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது எந்த அசபாவிதங்களும் நடைபெறாமல் இருக்கு அங்கு செல்போன் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டது. ஆனால் தற்போது அங்கு அசபாவிதங்கள் குறைந்ததால் இணையதள சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதில் அரசால் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட சில சமூக வலைதள பக்கங்களை பயன்படுத்த மட்டுமே மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக போலி செய்திகள் பரவுவதை தடுக்கவும், போராட்டங்களை தூண்டுவதை தடுக்கவும், பிரிவினைவாதத்தை தூண்டும் விதத்திலும் செய்திகள் வெளியாவதை தடுக்கவும் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசின் உத்தரவை மீறி விபிஎன் எனப்படும் (Virtual Private Networks ) மூலம் சிலர் சமூகவலைதளங்களை பயன்படுத்தி வதந்தி, போலி செய்திகளை பரப்புவதை காஷ்மீர் போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து இதுபோன்ற தவறான தகவல்களை பரப்புவதை காஷ்மீர் இளைஞர்கள் கைவிடவேண்டும் எனவும் இல்லாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காஷ்மீர் காவல்துறை எச்சரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் அரசு உத்தரவை மீறி விபிஎன் மூலம் சமூகவலைதளம் பயன்படுத்தி தவறான தகவல்களை பரப்பி சமூக அமைதிக்கு கேடு விளைவிக்கக்கூடிய கருத்துக்களை பதிவிட்ட நபர்கள் மீது காஷ்மீர் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்