இளைஞர்களுடன் கால்பந்து விளையாடும் மாடு !வைரலாகும் வீடியோ !
கோவாவில் உள்ள ஒரு மைதானத்தில் இளைஞர்கள் பலர் கால்பந்து விளையாடி கொண்டு இருந்தனர்.அப்போது அந்த மைதானத்திற்கு வந்த மாடு ஓன்று இளைஞர்கள் விளையாடி கொண்டு இருந்த கால்பந்து விளையாட்டை பார்த்து கொண்டு இருந்தது.
சிறிது நேரம் கழித்து அந்த மாடு இளைஞர்கள் வைத்து விளையாடி கொண்டு இருந்த அந்த கால்பந்தை இளைஞர்களிடம் கொடுக்கலாம் தன்னுடைய முகத்தாலும் , கால்களாலும் உதைத்து கொண்டு மைதானத்தில் வலம் வந்தது.
If this isn’t proof that everyone plays #football in #Goa, what else could be? ???? #incrdeibleindia #india pic.twitter.com/J7REpkkr8I
— Nature Photographer ???????? (@NitinNaik5) July 2, 2019
அந்த மாட்டிடம் இருந்து பந்தை எடுக்க இளைஞர்கள் முயற்சி செய்தும் , அந்த மாடு பந்தை தனது கால்களுக்கு இடையில் வைத்து கொண்டு நகர்த்தி கொண்டு இருந்தது.சிறிது நேரம் கழித்து இளைஞர்கள் போராடி மாட்டிடம் இருந்து பந்தை மீட்டு எட்டி உதைத்து விளையாட தொடங்கினர்.
கால்பந்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட அந்த மாடு மீண்டும் பந்தை தூரத்தி ஓட ஆரம்பித்தது. இளைஞர்களுடன் மைதானத்தில் பந்தை தூரத்தி அடிக்க முயற்சி செய்யும் அந்த மாட்டின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.