ஆன்லைனில் ஆர்டர் செய்த பார்சலுக்குள் பாம்பு..! அதிர்ந்து போன தம்பதி – வைரல் வீடியோ.!
கர்நாடகா : பெங்களூருவைச் சேர்ந்த தம்பதியினர், அமேசானில் ஆர்டர் செய்த Xbox Gaming Controller டெலிவரி பார்சலுக்குள் பாம்பு இருந்ததால் அதிர்ச்சியடைந்தனர். இதன் வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பின்னர், அந்த பாம்பு பொதுமக்கள் அணுக முடியாத இடத்தில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. பொறியாளர் தம்பதியினரான அவர்கள் இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
A family ordered an Xbox controller on Amazon and ended up getting a live cobra in Sarjapur Road. Luckily, the venomous snake was stuck to the packaging tape. India is not for beginners 💀
— Aaraynsh (@aaraynsh) June 18, 2024
நாங்கள் 2 நாட்களுக்கு முன்பு அமேசானில் இருந்து ஒரு எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலரை ஆர்டர் செய்தோம், பேக்கேஜில் ஒரு நேரடி பாம்பு கிடைத்தது. அதிர்ஷ்டவசமாக, அந்த பாம்பு பேக்கேஜிங் டேப்பில் மாட்டிக்கொண்டது, இதனால் எங்கள் வீட்டில் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.
நாங்கள் முழுமையான பணத்தைத் திரும்பப் பெற்றோம், ஆனால், இது தெளிவாக அமேசானின் அலட்சியம், பாதுகாப்பு மீறலாகும் என்று குறிப்பிடுந்தனர். இதையடுத்து, நெட்டிசன்களோ அமேசான் தற்போது பாம்பு டெலிவரி செய்கிறதா என விமர்சிக்கின்றனர்.
Amazon’s new feature – Snake Day Delivery 🐍🐍 pic.twitter.com/q09H33CqQS
— Vishnu 👨💻 (@vishnu_s_reddy) June 18, 2024
அமேசானின் பதில்
இந்த வீடியோவுக்கு பதிலளிக்கும் விதமாக, அமேசான் ரீ ட்வீட் செய்தது. அதில், “அமேசான் ஆர்டரில் உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்தைப் பற்றி அறிந்து வருந்துகிறோம். இதை சரிபார்க்க விரும்புகிறோம். தயவு செய்து தேவையான விவரங்களை இங்கே பகிரவும், அசௌகரியத்துக்கு மன்னிப்பு கோரியதுடன், ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளது.