21 வயது பெண்ணை 30 துண்டுகளாக வெட்டிய தம்பதியினர்..! தம்பதியினரை கைது செய்த போலீசார்..!

Murder

ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டம் முருமாதிஹி கிராமத்தை சேர்ந்த பெண் திலாபதி (21). இவர் அதே பகுதியை சேர்ந்த சந்திர ரௌத் என்ற நபரை காதலித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் சந்திர ரௌத்தை வற்புறுத்தி வந்துள்ளார்.

ஆனார் சந்திர ரௌத்  ஏற்கனவே திருமணம்ஆனவர். அவருக்கு ஆகி குழந்தைகள் உள்ளது. கடந்த வியாழன்கிழமை இரவு அவரது வீட்டிற்கு சென்று, சந்திர ரௌத் மனைவியின் முன்பே தன்னை திருமணம் செய்யுமாறு, திலாபதி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வெளிநாடு சென்று திருமணம் செய்வது அவசியமா? கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி..!

இதனால் ஆத்திரமடைந்த சந்திர ரௌத் மற்றும் அவரது மனைவி அப்பெண்ணை சரமாரியாக அடித்துள்ளனர். அவர்கள் அடித்ததில், அப்பெண் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்துள்ளார். அப்பெண் இறந்த பின், பெண்ணின் உடலை 30 துண்டுகளாக வெட்டி காட்டில் புதைத்துள்ளனர்.

இதற்கிடையில், இளம்பெண் காணாமல் போனதை அடுத்து, அப்பெண்ணின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் இளம்பெண்ணை சந்திர ரௌத் மற்றும் அவரது மனைவி  கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 25032024
manoj bharathiraja rip
PBKSvGT
Manoj Bharathiraja
eps - Annamalai
GT vs PBKS
Avesh Khan