பெங்களூருவில் சொகுசு கார்களை ஏற்றிச்சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.!
பெங்களூரு நெடுஞ்சாலையில் 6 எஸ்யூவி கார்களை ஏற்றிச்சென்ற கண்டெய்னர் டிரக் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.
புனேவிலிருந்து பெங்களூர் செல்லும் நெடுஞ்சாலையில் 6 எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிகளை (MG Hector SUV) ஏற்றிச்சென்ற கண்டெய்னர் டிரக் மீது துணிகளை ஏற்றி வந்துள்ள லாரி மோதியதில் இரண்டு வாகனமும் தீப்பிடித்தது. இந்த விபத்தில் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை.
இந்த விபத்தினால் காம்பட்கி காட் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நெரிசலை கட்டுப்படுத்த நெடுஞ்சாலையில் எதிர்புறம் போக்குவரத்தை போலீசார் திருப்பிவிட்டனர்.