மக்களே!! ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்க அறிய வாய்ப்பு.!
ஆதார் அட்டை புதுப்பிப்பு : இந்தியாவில் தனிநபர் ஆவணத்தில் முக்கியமாக திகழ்வது ஆதார் அட்டை ஆகும். முன்னதாக, ஆதார் அட்டையில் உள்ள முகவரி, தந்தை பெயர் உள்ளிட்ட விவரங்களில் ஏதெனும் திருத்தங்கள் இருந்தால், அதனை நாளை (ஜூன் 14ஆம் தேதி) வரை மட்டுமே இலவசமாக திருத்தம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்பொழுது, அந்த காலக்கெடுவை செப்டம்பர் 14ம் தேதி வரை நீட்டித்துள்ளதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தெரிவித்துள்ளது. ஆதார் உடன் பதிவு செய்யப்பட்ட செல்ஃபோன் எண்ணுக்கு கிடைக்கும் OTP மூலம் விவரங்களை திருத்தம் செய்ய முடியும்.
இருப்பினும், இந்த சேவை myAadhaar போர்ட்டலில் புதுப்பித்தால் மட்டுமே இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவே, ஆதார் மையங்களில் புதுப்பித்தால் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அதிலும் குறிப்பாக, உங்கள் ஆதாரில் கருவிழி ஸ்கேன், கைரேகைகள் மற்றும் முகப் புகைப்படங்கள் போன்ற பயோமெட்ரிக் தகவல்களை ஆன்லைனில் புதுப்பிக்க முடியாது. மேலும், ஆதார் அட்டையில் உள்ள பாலின விவரங்களையும் ஒருமுறை மட்டுமே புதுப்பிக்க முடியும்.
ஆதார் அட்டை விவரங்களை இலவசமாக புதுப்பிப்பது எப்படி?
- உங்கள் 16 இலக்க ஆதார் எண்ணைப் பயன்படுத்தி https://myaadhaar.uidai.gov.in/ இல் உள்ளே நுழைய முடியும்.
- இப்பொது கேப்ட்சாவை உள்ளீடு செய்து OTP பயன்படுத்தி உள்நுழை என்பதைக் கிளிக் செய்யவும்.
- பின்னர், ஆதாரில் ஏற்கனவே இருக்கின்ற மொபைல் எண்ணில் நீங்கள் பெற்ற OTP குறியீட்டை உள்ளிடவும்.
- இப்போது நீங்கள் போர்ட்டலை அணுக முடியும்.
- அதில், ‘ஆவண புதுப்பிப்பு’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும், அதில் தற்போதைய விவரங்கள் காட்டப்படும்.
- இதில், உங்கள் அடையாளம் மற்றும் முகவரியில் மாற்றம் இருந்தால், அதனை கிளிக் செய்து தேவையான ஆதாரத்தைப் பதிவேற்றவும்.
- பின்னர், ‘சமர்ப்பி’ என்பதை கிளிக் செய்யவும்.
- 14 இலக்க கொண்ட புதுப்பிப்பு கோரிக்கை எண் (URN) உருவாக்கப்பட்ட பிறகு, புதுப்பிப்பு கோரிக்கை ஏற்கப்படும்.