ஸ்பெயின் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு .! தலைமை செயலர், டிஜிபிக்கு பறந்த உத்தரவு.!
Jharkhand – ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஒரு தம்பதி, இரு சக்கர வாகனத்தில் ஆசிய நாடுகளை சுற்றி வந்தனர். அவர்கள், வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளை அடுத்து கடந்த வாரம் இந்தியா வந்தனர். கடந்த மார்ச் 1ஆம் தேதி இரவு ஜார்கண்ட் மாநில தும்கா எனுமிடத்தில் அருகில் விடுதி இல்லாத காரணத்தால் சாலையோர அருகில் தற்காலிக கூடாரம் அமைத்து தங்கினர்.
Read More – என் கணவரை தாக்கி…7 பேர்..,ஸ்பானிஷ் பெண்ணின் பதைபதைக்க வைத்த வாக்குமூலம்.!
அப்போது அங்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல் தம்பதியினரை தாக்கி, ஸ்பெயின் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். ஸ்பெயின் நாட்டு பெண்ணிற்கு இந்தியாவில் நேர்ந்த கொடூரம் நாட்டையே அதிர்ச்சிக்குளாக்கியது. பெண்ணின் வாக்குமூலம், மேற்கண்ட விசாரணை ஆகியவற்றை கொண்டு 3 பேரை ஜார்கண்ட் மாநில காவல்துறையினர் கைது செய்தனர்.
Read More – பிரதமர் மோடியை சந்தித்தது ஏன்? அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்
தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளை பிடிக்க காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்ட தம்பதியினருக்கு இழப்பீடு சட்டத்தின் கீழ் 10 லட்சம் ரூபாயை ஜார்கண்ட் மாநில அரசு வழங்கியுள்ளது.
Read More – ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம்… தமிழகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை!
இந்நிலையில் தான் , நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தை ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்து வருகிறது. முக்கிய அதிகாரியாக ரிது குமார் எனும் வழக்கறிஞரை நீதிமன்றம் நியமித்துள்ளது. வரும் மார்ச் 7ஆம் தேதிக்குள் இந்த வழக்கு தொடர்பான முழு விசாரணை விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என மாநில தலைமை செயலாளர், மாநில டிஜிபி, தும்கா எஸ்பி, உள்துறை செயலகம் ஆகியவற்றிக்கு ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.