பள்ளி பேருந்து விபத்து.! ஆசிரியர் என பொய் கூறி சிகிச்சை.! ஓட்டுநர் மீது கொலை வழக்கு.!
பாலகாடு பகுதியில் பள்ளி மாணவர்கள் சென்ற சுற்றுலா பேருந்து கேரளா அரசு பேருந்து மீது மோதிய விபத்து தொடர்பான வழக்கில் சுற்றுலா பேருந்து ஓட்டுநர் ஜோமன் பட்ரோஸ் மீது தன்னிச்சையான ஆணவ கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாலக்காடு அருகே எர்ணாகுளம் தனியார் பள்ளி மாணவர்கள் வந்த சுற்றுலா பேருந்தும், அரசு பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில், சம்பவ இடத்திலேயே 7 மாணவர்கள் மற்றும் அரசு பேருந்தில் பயணித்த 2 பயணிகள் உயிரிழந்துவிட்டனர்.
இதில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள பாலக்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் சுற்றுலா பேருந்தை இயக்கிய ஓட்டுநர் ஜோமன் பட்ரோஸ் வேகமாக பெருந்தை இயக்கியதும், அரசு பேருந்தை முந்த முயற்சித்ததும் தான் விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
மேலும், ஓட்டுநர் ஜோமன் பட்ரோஸ் மருத்துவமனையில் தான் ஒரு ஆசிரியர் என பொய் கூறி சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின்னர் மருத்துவமனையில் இருந்து தப்பி சென்றுவிட்டார். ஓட்டுநர் ஜோமன் பட்ரோஸ் மீது தன்னிச்சையான ஆணவ கொலை எனும் பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஓட்டுநர் ஜோமன் பட்ரோஸை கைது செய்த காவல்துறையினர், மருத்துவமனையில் இருந்து ஓட்டுநர் ஜோமன் பட்ரோஸ் தப்பிக்க உதவியதாக இரண்டு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களையும் கைது செய்து உள்ளனர்.