விமானத்தில் எமர்ஜென்சி கதவை தொட்ட மாணவர் மீது வழக்குப்பதிவு..!
சென்னையில் இருந்து டெல்லிக்கு சென்ற விமானத்தின் எமர்ஜென்சி கதவை தொட்ட மாணவர் மீது வழக்குப்பதிவு.
பொறியியல் மாணவர் ஒருவர், சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் சென்றுள்ளார். அப்போது, அவர் விமானத்தில் இருந்த எமர்ஜென்சி கதவை தொட்டுள்ளார்.
எமர்ஜென்சி கதவை தொட்ட மாணவர் மீது வழக்குப்பதிவு
இதனை கவனித்த விமான பணியாளர் விமானியிடம் தகவல் அளித்துள்ளார். இதனை அடுத்து இது தொடர்பாக விமானி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். கதவை தொட்ட மாணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து மாணவர் கூறுகையில் கதவை தொட்டேன், ஆனால் அதை நான் திறக்க முயலவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். இந்த நிலையில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி போலீசார் மாணவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.