குஜராத், பாஜக பிரமுகர் சலீம் நூர் முகமது வோரா, அவர் மனைவிக்கு போனில் முத்தலாக் வழங்கியதாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இஸ்லாமிய முறையின் படி தலாக் (விவாகரத்து) என மூன்று முறை கூறினால் கணவன் – மனைவி பிரிந்துவிட்டதாக அர்த்தம் என கூறப்பட்டு வந்தது. இந்த முத்தலாக் இஸ்லாமிய முறைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் 2017ஆம் ஆண்டே தீர்ப்பு வழங்கியுள்ளது.
அண்மையில், குஜராத் மாநிலம் மெஹ்சானாவைச் சேர்ந்த பாஜக பிரமுகர் சலீம் நூர் முகமது வோரா மீது, அவர் தனது மனைவிக்கு போனில் முத்தலாக் வழங்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2000-ம் ஆண்டு சலீம், சித்திக்பான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சித்திக்பான் அளித்த புகாரில் கூறப்பட்டது என்னவென்றால், தனது கணவர் தனக்கு முத்தலாக் கொடுத்ததாகவும், அதனை தனது போனில் பதிவு செய்து வைத்தார். மேலும் , தனது கணவர் செயலுக்கு தன் மாமியார் ஆதரிப்பதாகவும், தன்னை வீட்டை விட்டு வெளியேறும்படி கணவர் சலீம் சித்திரவதை செய்ததாகவும் சித்திக்பான் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…